

சென்னை: சென்னை மாதவரம் சாஸ்திரி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா வசித்து வருகிறார். இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணி தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரை, நித்யா கற்களால் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் மாதவரம் காவல் நிலையத்தில் மணி புகார் அளித்தார். புகாரின்பேரில், பிறர் சொத்துக்கு சேதம்விளைவித்தல் என்ற பிரிவின்கீழ் மாதவரம் போலீஸார் நித்யா மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.