தஞ்சாவூர் காவல் உதவி மைய கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களால் பரபரப்பு

மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட கண்ணாடி
மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட கண்ணாடி
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள காவல் உதவி மையத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம் முகப்பில், காவல் உதவி மையம் உள்ளது. இதனை, தஞ்சாவூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி திறந்து வைத்தார். இங்கு சூழற்சி முறையில் மேற்கு போலீஸார் பாதுகாப்பு பணியிலும், மேலும், சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கும் வகையில், கணினியும் வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மர்ம நபர்கள் காவல் உதவி மையத்தின் முகப்பு கண்ணாடியை கல்லை கொண்டு வீசி உடைத்துள்ளனர். இதனால். அந்த மையத்திற்குள் உடைந்த கண்ணாடி துகள்களும், கற்களும் கிடந்தன. ஆனால், இதுகுறித்து நேற்று காலை போலீஸார் கண்டு கொள்ளாமலும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்ததையறிந்த, போலீஸார் அங்கு புதிய கண்ணாடி கதவினை உடனடியாக மாற்றிப் பொறுத்தினர். ஆனால், பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சுற்றிலும் நவீன முறையில் சிசிடிவி கேமரா பொருத்தியிருந்தும் போலீஸாரின் காவல் உதவி மையக் கண்ணாடியை உடைத்தவர்களை பிடிக்காமல் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in