சந்திரிகா. (கோப்புப்படம்)
சந்திரிகா. (கோப்புப்படம்)

திருப்பத்தூர் அருகே மூன்றாம் பாலினத்தவர் மர்ம மரணம்

Published on

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப் பட்டு அடுத்த புது பூங்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் சந்துரு (23). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மூன்றாம்பாலினத்தவராக தன்னை மாற்றிக்கொண்டு, தனது பெயரை சந்திரிகா என மாற்றினார்.

மூன்றாம்பாலினத்தவராக மாறிய சந்திரிகாவை அவரது உறவினர்கள், குடும்பத்தார் புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு குரிசிலாப்பட்டில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மூன்றாம் பாலினத்தினர் வந்திருந்தனர்.

இந்த விழாவில் சந்திரிகாவும் கலந்து கொண்டார். விழா முடிந்து குரிசிலாப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சந்திரிகா சென்றார். இதனைதொடர்ந்து நேற்று கூத்தாண்டவர் கோயில் அருகே உள்ள ஒரு நிலத்தில், சந்திரிகா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந் ததும் குரிசிலாப்பட்டு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சந்திரிகாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தினர் குவிந்தனர். அப்போது சந்திரிகாவின் உறவினர்களை மூன்றாம் பாலினத்தினர் முற்றுகை யிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in