

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் பழைய காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சண்முகம்(57). இவர் புதுச்சேரியில் உள்ள விளையாட்டு கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக உள்ளார்.
இவரிடம் கல்லூரி, பள்ளிமாணவ, மாணவிகள் சேர்ந்து கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர். ஒரு மாணவிக்கு இவர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.