திருச்சி | இரும்பு லாக்கரில் இருந்த 107 பவுன் நகைகள் மாயம்

திருச்சி | இரும்பு லாக்கரில் இருந்த 107 பவுன் நகைகள் மாயம்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியிலுள்ள பிவிவி காலனியை சேர்ந்தவர் மேகநாதன் (64). இவர் தனது வீட்டிலுள்ள இரும்பு பெட்டகத்துக்குள் கடந்த 2021-ம் ஆண்டு 107 பவுன் நகைகளை வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, அதில் நகைகள் இல்லாதது கண்டு மேகநாதன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

13 முறை சாவிகளை பயன்படுத்தினால் மட்டுமே திறக்கும் வகையிலான பழங்கால இரும்பு பெட்டகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த நகைகள், பெட்டகம் உடைக்கப்படாமலேயே மாயமாகி உள்ளது.

எனவே, நன்கு தெரிந்தவர்கள்தான் சாவியைப் பயன்படுத்தி பெட்டகத்தை திறந்து நகைகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in