Published : 21 Jan 2023 07:18 PM
Last Updated : 21 Jan 2023 07:18 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரூ.1.33 லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஊர்க்காவல் படை வீரரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே மோர்பண்ணை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ராஜேஸ்வரன்(28). இவர் தொண்டி கடற்கரை காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராகப் பணிபுரிகிறார்.
திருவாடானை காவல் உட்கோட்ட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ராஜேஸ்வரனை நேற்று பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.1,33,500 மதிப்புள்ள 267 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்ற சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT