

கோவை: கோவை மத்தம்பாளையத்தில் இளைஞர்கள், தொழிலாளர்களை குறிவைத்து சிலர் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்து வருவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீஸார் நேற்று மத்தம்பாளையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றிய மூன்று இளைஞர்களை பிடித்து சோதனையிட்டனர். விசாரணையில் அவர்கள், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கோவர்தனன்(23), பிரவீன்குமார் (21), நவீன்குமார்(21) என்பதும், போதை மாத்திரைகள், கஞ்சா விற்பவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார், 200 கிராம் கஞ்சா, 208 வலி நிவாரண மாத்திரைகள், 4 சிரிஞ்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.