கோவை | ரூ.2.50 கோடி மதிப்பு தங்கத்தை விமானத்தில் கடத்திய 2 பேர் கைது

கோவை | ரூ.2.50 கோடி மதிப்பு தங்கத்தை விமானத்தில் கடத்திய 2 பேர் கைது
Updated on
1 min read

கோவை: ஷார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக இரண்டு பயணிகள் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இயக்கப்பட்ட விமானத்தில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட அதிகாரிகள் இரண்டு பயணிகளிடம் இருந்து மூன்றரை கிலோ எடையுள்ள ரூ. 2.50 கோடி மதிப்பிலான கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கடலூரை சேர்ந்த மணிகண்டன் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (20) என்பது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in