

கோவை: கோவை அழகேசன் சாலையில் நேற்று முன்தினம் சாயிபாபாகாலனி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
பிடிபட்டவர்கள், வலி நிவாரண மாத்திரைகளை மருந்துக்கடைகளில் வாங்கி, போதைப் பயன்பாட்டுக்காக கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சஞ்சய் (19), கவுண்டம்பாளையம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ஜானகிராமன் (26), கணபதி 2-வது வீதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செல்வகுமார் (27) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 மாத்திரைகள், ரூ.37 ஆயிரம் தொகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.