

மும்பை: ரூ.28 கோடி மதிப்புள்ள கோகைன் என்ற போதைப்பொருளுடன் மும்பையைச் சேர்ந்தவரை சுங்கத்துறை அதிகாரிகள் விமானநிலையத்தில் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு நேற்று வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடமிருந்து 2.81 கிலோ எடையுள்ள கோகைன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28.10 கோடியாகும். விசாரணையில் மும்பையைச் சேர்ந்த அந்த நபர் கூறும்போது, “சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் மூலம் இதைக் கொண்டு வந்தேன். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்னை அந்த நபர் ஏமாற்றி இந்த பையை கொடுத்தனுப்பி விட்டார்” என்றார்.