கும்பகோணம் | வெள்ளி டம்ளர் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

கும்பகோணம் | வெள்ளி டம்ளர் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசராகவன் மகன் ஜெகநாதன். இவரது வீட்டில் இருந்த 115 கிராம் எடையுள்ள வெள்ளி டம்ளர் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் வடக்கு அடையவளஞ்சான் தெரு பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி மகன் சந்தானகோபாலன்(60) திருடிச் சென்றுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சந்தான கோபாலனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சந்தான கோபாலனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in