

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுபாட்டில்கள் கடத்தல், வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 11 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், குற்ற வழக்கு உள்ள 4 குற்றவாளிகள் திருந்தி வாழப் போவதாக பிணை ஆணை எழுதிக் கொடுத்த ஒராண்டு காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.