

தேனி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே ராயப் பன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி செண்பக வள்ளி(43). இவர் கோவையில் உள்ள தனது பேரனை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் பேருந்தில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இவர் அருகே உட்கார்ந்திருந்த பெண் ஒருவர் பெரியகுளம் அருகே வந்தபோது கேக் ஒன்றை கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் செண்பகவள்ளி மயங்கினார். தேனி பேருந்து நிலையத்தில் நினைவு வந்தபோது தனது கழுத்தில் இருந்த 3 பவுன் செயின் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.