திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Updated on
1 min read

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் மகன் எட்டியான் (48). இவர் செஞ்சி சாலையில் உள்ள பெட் ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.

கடந்த 2 ம் தேதி வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், செஞ்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள சுடுகாட்டில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ரோசணை காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அழுகிய நிலையில் இருந்த அந்த சடலத்தை மீட்டு விசா ரணை செய்தனர்.

விசாரணையில் உயிரிழந்தது எட்டியான் என்பது உறுதி படுத்தப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு எடுத் துச் சென்றனர்.

அவரை யாரேனும் கொலை செய்து வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in