Published : 06 Jan 2023 06:20 AM
Last Updated : 06 Jan 2023 06:20 AM

திருப்பூர் | திருமணத்துக்கு வற்புறுத்தியதால் பெண் எரித்துக் கொலை: பல்லடத்தில் இளைஞர் கைது

திருப்பூர்: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல்லடம் இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த லோகேஷ்(21) என்பவருடன்காதல் ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் லோகேஷை வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால், லோகேஷ் பதில் கூறாமல் தவிர்த்து வந்தாராம். ராயர்பாளையம் அருகே காட்டுப் பகுதியில் இருவரும் நேற்று முன்தினம் சந்தித்து பேசியபோதும் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் லோகேஷை மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த லோகேஷ், அவரை கல்லால் தாக்கியதோடு, கையில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றார். உடல் முழுவதும் படுகாயமடைந்த நிலையில் அந்தப் பெண் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் பல்லடம் நீதிபதி சித்ரா வாக்குமூலம் பெற்றார்.அதைத்தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை அந்தஇளம்பெண் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பல்லடம்போலீஸார் லோகேஷை பிடித்தனர். அவர் போதை மயக்கத்தில் இருந்ததால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், நேற்று இரவுலோகேஷ் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x