

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் சிலரை போலீஸார் நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டு மீண்டும், வேனில் ஏற்றி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.
அவ்வாறு கைதிகளை ஏற்றி வந்த போலீஸ் வேனை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் திடீரென வேனுக்குள் கஞ்சா பொட்டலங்களை வீசினர்.
காவலுக்கு வந்த போலீஸார் உடனே வேனிலிருந்து இறங்கி கஞ்சா பொட்டலங்களை வீசிய ஆசாமிகளை விரட்டினர். அதில் ஒரு ஆசாமி பிடிபட்டார். இன்னொருவர் போலீஸாரை தள்ளி விட்டுவிட்டு தப்பினார்.
போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பச்சைமுத்து (25) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார் தப்பி ஓடிய அவரது கூட்டாளி அன்பழகன் என்பவரைத் தேடி வருகின்றனர்.