Published : 06 Jan 2023 06:10 AM
Last Updated : 06 Jan 2023 06:10 AM
கடலூர்: வடலூர் ராகவேந்திரா சிட்டி நகரில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளையில் உள்ள ஏடிஎம்மில் கடந்த மாதம் 19-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை நெம்பி திறக்க முயற்சி செய்து உள்ளனர். அலாரம் ஒலித்ததால், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து வங்கி உதவி மேலாளர் நவீன்குமார் வடலூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடலூர் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீஸார் ரயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுடிருந்தனர். அங்கு நின்றிருந்த 4 பேர் போலீஸாரை கண்டதும் ஓட முயன்றனர். ஒருவர் ஓடிவிட மற்ற 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் இந்தியன் வங்கி ஏடிஎம் - இல் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. அவர்கள் வடலூர் கணபதி நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் (56), நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு சேர்ந்த ராஜா (42), ராகுல்( 34) என்பது தெரிய வந்தது. 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீஸார் தப்பி ஓடிய இந்திரா நகர் மாற்று குடியிருப்பை சேர்ந்த சண்முகம் என்பவரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT