Published : 05 Jan 2023 04:00 AM
Last Updated : 05 Jan 2023 04:00 AM
கோவை: கோவை மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(37). இவரது மனைவி தேவி(31). இரு குழந்தைகள் உள்ளனர். ராஜேந்திரனும், தேவியும் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
நேற்று அதிகாலை இருவரும் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர். சிறுவாணி சாலை, ஆலாந்துறை அரசு மேல் நிலைப்பள்ளி அருகே வந்தபோது, கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேந்திரனும், தேவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலாந்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை ஜி.என்.மில்ஸ் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன்(56). இவர், கடந்த 3-ம் தேதி தெரிந்த நபருடன் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். நவநீத கிருஷ்ணன் பின்னால் அமர்ந்திருந்தார். சாயிபாபாகாலனி அருகே சென்றபோது, எதிரே வந்தலாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த நவநீத கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்ற னர். கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 3-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சத்தி சாலையில் சென்றார். ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் ரமேஷ் உயிரிழந்தார். கோவில்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT