

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பள்ளகவுண்டம்பாளையம் கூனம்பட்டிபுதூர் ரோஹோபோத் புதுவாழ்வு இல்லத்தை சேர்ந்த மதபோதகர் ஆண்ட்ரூஸ் (46). இவர், வீரபாண்டி தேவாலயத்துக்கு வந்த ஒரு பெண்ணிடம், உங்கள் குழந்தைகளை இங்குள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு, எனது விடுதியில் தங்கி படிக்க வைக்கலாம் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய அவர், தனது மகன், மகளை ஆண்ட்ரூஸ் விடுதியில் சேர்த்துள்ளார். எனினும், அரையாண்டு விடுமுறைக்குப்பின் வந்த சிறுமியை விடுதியில் சேர்க்க ஆண்ட்ரூஸ் மறுத்தார்.
இதுதொடர்பாக தாய், கேட்டபோது, கடந்த மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த தன்னிடம் ஆண்ட்ரூஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் தாய் புகார் தந்த புகாரின்பேரில் ஊத்துக்குளி போலீஸார் போக்சோ வழக்கில் ஆண்ட்ரூஸை நேற்று கைது செய்தனர்..