

திண்டுக்கல்: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மாலையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமநாதபாண்டியன்(23). இவர் 2020-ம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராமநாதபாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார்.