

ராமநாதபுரம்: போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்கள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் (56). இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாகவும், அவருக்கு உடந்தையாக ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்ற செந்தில்வேல்(36) மாணவி களை மிரட்டுவதாகவும் சிறுவயல் உள்ளிட்ட 5 கிராம மக்கள் கடந்த வாரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து நயினார்கோவில் போலீஸார் தலைமையாசிரியர் ஜூலியர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர் ஜெயபால் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். திருநெல்வேலியில் தலை மறைவாக இருந்த தலைமையாசிரியர் ஜூலியஸ் ரவிச்சந் திரனை நயினார்கோவில் போலீஸார் கைதுசெய்து ராமநாதபு ரம் சிறையில் அடைத்தனர். தலை மறைவான ஜெயபாலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அ.பாலுமுத்து, போக்சோ வழக்கில் சிக்கிய இரண்டு ஆசிரியர்களையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்