Published : 01 Jan 2023 12:20 PM
Last Updated : 01 Jan 2023 12:20 PM
சேலம்: சேலம் மாநகர காவல்துறை சார்பில் 2022-ம் ஆண்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாநகர காவல்துறை சார்பில் 2022-ம் ஆண்டில் 174 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், ரவுடிகள் 81 பேர், தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் 51 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் 16 பேர்,
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவர்கள் 9 பேர் உள்ளிட்டோர் அடங்குவர். 2021-ம் ஆண்டில் 129 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாநகர காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகளில், அதிகபட்சமாக, 2022-ம் ஆண்டில் தான் 174 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர், என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT