கல்வராயன்மலை அடிவாரத்தில் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது

கல்வராயன் மலையடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழிக்கும் போலீஸார்.
கல்வராயன் மலையடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழிக்கும் போலீஸார்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட சுமார் 6 கிலோ கஞ்சா செடிகளை அழித்த மதுவிலக்குப் போலீஸார், அது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

கல்வராயன்மலைப் பகுதியில் நேற்று முன்தினம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல்கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்தலைமையில், தனிப்படைபோலீஸார் சோதனையில் ஈடுப்பட்டபோது, பெரிய பலாபூண்டி கிராம பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 6 கிலோ கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.

மேலும் அதே பகுதியில்கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் (34) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ பறிமுதல் செய்துநீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்றாலோ, பயிர் செய்தாலோ,விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in