Published : 30 Dec 2022 04:17 AM
Last Updated : 30 Dec 2022 04:17 AM

ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஆவடி: ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சமீபத்தில் கொரட்டூர் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய, சென்னை - புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற மணிகண்டன்,

சென்னை எம்.ஜி.நகர் சிவசங்கரன் என்கிற சங்கர், வேதாச்சலம் என்கிற அப்பு, டில்லிராஜ், மணிவண்ணன் என்கிற யமஹா மணி, பெருங்குடி விஜயகுமார் என்கிற ஓட்ட விஜி, குன்றத்தூர் பிரசாந்த் என்கிற ஜொள்ளு ஆகிய 7 பேர் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், பூந்தமல்லி காவல் நிலைய எல்லைகளில் கஞ்சா, வழிப்பறி வழக்குகளில் தென்காசி மாவட்டம் புதூர் வசந்தகுமார், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மயிலரசன், கொரட்டூரைச் சேர்ந்த அப்பு, மண்ணூர்பேட்டை தினேஷ் ஆகிய 4 பேரும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x