மதுரையில் இளைஞர்களை தாக்கி மொபைல் போன், பைக் பறித்த 4 பேர் கைது

மதுரையில் இளைஞர்களை தாக்கி மொபைல் போன், பைக் பறித்த 4 பேர் கைது
Updated on
1 min read

மதுரை: மதுரையில் இளைஞர்களை தாக்கி செல்போன்கள், இரு சக்கர வாகனத்தை வழிப்பறி செய்து தப்பிச்சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், குட்டம் பகுதியைச் சேர்ந்த அரசன்மகன் குமார் (27), அவரது சகோதரர் சங்கர்கணேஷ் (17). இருவரும் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள பழக்கடை அருகே வாகனத்தை நிறுத்தி, மொபைல் போனில் வழித்தட விவரங்களை ஜிபிஎஸ்சில் பார்த் துக் கொண்டிருந்தனர்.

அப்போது 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்டகும்பல், குமார், சங்கர்கணேஷை கத்தியால் கழுத்து, தோள்பட்டையில் தாக்கி விட்டு மொபைல் போன்கள், இரு சக்கர வாகனத்தையும் வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக தகவலறிந்த, இரவு ரோந்து பணியிலிருந்த சிலைமான் இன்ஸ்பெக்டர் மோகன், சிறப்பு எஸ்ஐ செந்தில் மற்றும் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு வழிப்பறி செய்த 4 பேரையும் பிடித்தனர். அவர்கள், மதுரைவண்டியூரைச் சேர்ந்த ஜனார்த் தனன் (18), பாலவிஷ்ணு (25), அஜித்குமார் (21), வசந்தகுமார் (21) எனத் தெரிய வந்தது. 4 பேரை யும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in