

கும்பகோணம்: கும்பகோணத்தில் கடத்தப்பட்ட 12500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
கும்பகோணம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி, மூப்பக்கோயிலில் வாடகைக்கு குடோன் எடுத்து, அங்கு அரைத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதாக உணவு பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று இரவு உதவி ஆய்வாளர் ப .செல்வமணி தலைமையிலான போலீஸார் கும்பகோணம் - சுவாமிமலை பிரதான சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டாட்டா ஏசி வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த, வாகனத்தில் வந்த ஒட்டுநர் முப்பக்கோயிலைச் சேர்ந்த அஜித்குமார்(23), அருள்(19), ஆசைக்குமார்(20) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அரசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து அதில் இருந்த அரிசிகளை கும்பகோணத்தில் உள்ள சேமிப்பு குடோனில் ஒப்படைத்தனர். மேலும் குறவனுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகிகள் பரிந்துரை செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.