Published : 23 Dec 2022 04:05 AM
Last Updated : 23 Dec 2022 04:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளரை காரை ஏற்றி கொல்ல முயன்றதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அக்ரஹாரத்தைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் வெங்கடாசலம் (37). இவர் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு சிலர் காரை நிறுத்தியுள்ளனர். இதற்கு வெங்கடாசலம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தகராறு நடந்தபோது காரை இயக்கிய நபர் வெங்கடாசலம் மீது காரை ஏற்றியுள்ளார். மேலும், காரில் வந்த அனைவரும் உடனடியாக காரில் ஏறி தப்பிச் சென்றனர். காரை ஏற்றியதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலத்தை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கேஆர்பி அணை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வெங்கடாசலம் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT