

கரூர்: கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அதன்பேரில் நடந்த விசாரணையின் முடிவில், சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சாந்தி(42),மேகலா(42), மாயா(45) மற்றும் கார்த்தி(27), கார்த்திகேயன்(27), சந்தோஷ்(30), தன்னாசி என்ற சமுத்திரபாடி(26), கவுதமன் (30) ஆகிய 8 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள், கடந்த 6 மாதங்களாக சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்ததாக ஓய்வுபெற்ற எஸ்.ஐ. மோகன்(61) என்பவரையும் நேற்று கைது செய்தனர்.