ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்வதாக ரூ.70 லட்சம், 143 பவுன் முறைகேடு: மதுரையில் 4 பேர் கைது

ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்வதாக ரூ.70 லட்சம், 143 பவுன் முறைகேடு: மதுரையில் 4 பேர் கைது
Updated on
1 min read

மதுரை: மதுரையில் ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்வதாகக் கூறி பல பேரிடம் ரூ.70 லட்சம், 143 பவுன் முறைகேடு செய்ததாக 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் சந்திரா. கே.புதூரைச் சேர்ந்தவர்கள் பாத்திமா(34). இவரது கணவர் ஜாகிர் உசேன்(40). இவர்கள் சந்திராவை கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் அணுகினர். புதூர் மகாலட்சுமி நகரில் உள்ள அவரது கடையை வாடகைக்குப் பேசி, அதில் அலுவலகம் ஒன்றை தொடங்கினர். ஆனால் பாத்திமாவும், ஜாகிர் உசேனும் வாடகை கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஆன்லைனில் தொழில் செய்வதாகவும், அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று பாத்திமா, ஜாகிர் உசேன், புதூரைச் சேர்ந்த பரமேசுவரி, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் ஆசை வார்த்தைகள் கூறினர். இதை நம்பிய சந்திரா, தனது பணம் மட்டுமின்றி பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் வசூலித்த பணம் மற்றும் நகைகளைக் கொடுத்தார். அந்த வகையில் ரூ.70 லட்சம், 143 சவரன் நகைகளைப் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் 4 பேரும் முறைகேடு செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவில் சந்திரா புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in