

சென்னை: சென்னை கே.கே.நகர் பத்ராசாலையில் சென்னை மாநகராட்சி அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வேலைகளை முடித்துவிட்டு, அம்மா உணவகத்தையும் பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்றனர். அம்மா உணவகத்தின் கண்காணிப்பாளர் நேற்று அதிகாலை உணவகத்தை திறக்க முயன்றார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். உள்ளே சென்றுபார்த்த போது உணவகம் கல்லாபெட்டியில் இருந்த ரூ.1,500 மற்றும் 6 இட்லி தட்டுகள் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.