

கோவை: இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், பாபர் மசூதி இடிப்பு தினம் தொடர்பாக, கடந்த 5-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சென்னையைச் சேர்ந்த தடா ஜெ.ரகீம் என்பவரும், சர்ச்சை கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் பிரேம்குமார், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிததார். அதன் பேரில், அர்ஜூன் சம்பத், தடா ஜெ.ரகீம் ஆகியோர் மீது இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.