Published : 07 Dec 2022 04:05 AM
Last Updated : 07 Dec 2022 04:05 AM

திருப்பூரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை முற்றுகையிட்ட பெண்கள்

பிரதிநிதித்துவப் படம்

திருப்பூர்: திருப்பூர் வித்யாலயம் பாரதி நகரில் செயல்பட்டு வரும் தனியார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: இந்நிறுவனத்தின்சார்பில், மாதம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும், வேலை தேடுபவர்கள் குறிப்பிட்ட முகவரியை அணுகலாம் எனவும் முகநூலில்தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஊத்துக்குளி வெள்ளியம்பாளையம், திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் சிலர், இந்நிறுவனத்தை அணுகினோம்.

அந்நிறுவன பணியாளர்கள் தெரிவித்தபடி நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்தினோம். அதன்பின்பு, எங்களுக்கு கீழ் பலரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்எனவும், இதற்காக ரூ.10,500 முன் பணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். நாங்களும் பணத்தை செலுத்தினோம். இதையடுத்து முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் போலியாக கணக்குகளை தொடங்க வேண்டுமென எங்களை வற்புறுத்தினர். இதையடுத்து நாங்கள் தொடங்கிய போலி சமூக வலைதள முகவரியில் பெண்களின் புகைப்படங்களை அவர்களே பதிவிட்டனர்.

இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். தனியார் நிறுவனத்தின் மீது வீரபாண்டி போலீஸாரும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள்பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும், என்றனர். தகவலின்பேரில் அங்கு வந்த வீரபாண்டி போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x