சென்னையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது: கைத்துப்பாக்கி, 35 பட்டாக்கத்திகள் பறிமுதல்

சென்னையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது: கைத்துப்பாக்கி, 35 பட்டாக்கத்திகள் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: சென்னை ஆர்.ஆர்.நகர் டிஎச் சாலையில் நேற்று அதிகாலை கொடுங்கையூர் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீஸார் விசாரணை நடந்த முயன்றனர்.

அப்போது அந்தகாரில் வந்த 2 பேர், காரில்இருந்து இறங்கி கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியை நோக்கி தப்பி ஓடினர். இதையடுத்து போலீஸார் துரத்திச்சென்று 2 பேரையும் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நசீப் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை பிரகாஷ்(31), அவரது கூட்டாளி செங்குன்றம் வடகரை பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) விக்கிரமாதித்தன்(37) என்பது தெரியவந்தது. வெள்ளை பிரகாஷ்மீது சென்னை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளதும், தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

போலீஸார் சோதனை: இதையடுத்து சென்னை எருக்கஞ்சேரியில் வெள்ளை பிரகாஷ் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சோதனை செய்தபோது, வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டாக் கத்திகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 4 கிலோசிக்கிமுக்கி கற்கள், 75 கிராம் இரும்பு ஆணிகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

இது தொடர்பான விசாரணையில், இருவரும், தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து, தங்களது எதிரி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களை வீட்டில்தயார் செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்தபோலீஸார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in