ரோகித் சர்மா
க்ரைம்
அங்கன்வாடி கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மாவலிங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரோகித் சர்மா (3). இவர் நேற்று நண்பகல் 12 மணியளவில் பாட்டியுடன் ரேஷன் கடைக்குச் சென்றுவிட்டு, விளையாடிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, இவர்களது வீட்டருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள், எதிர்பாராதவிதமாக விழுந்தார். குழிக்குள் ஊற்றெடுத்து நீர் நிரம்பியிருந்த நிலையில், நீரில் மூழ்கி ரோகித் சர்மா உயிரிழந்தார். சிறுவனை காணாமல் பாட்டி அவரைத் தேடியபோது, அவர் குழிக்குள் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து கை.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
