

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷிரத்தா வாக்கரை கொலை செய்த அப்தாப் அமீன் (28) குறித்து டெல்லி போலீஸார் நேற்று கூறியதாவது.
ஷிரத்தாவின் உடல் பாகங்களை போலீஸார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மண்டை ஓடு இன்னும் கிடைக்கவில்லை. ஷிரத்தா வாக்கர் அணிந்திருந்த மோதிரத்தை தனது புதிய தோழிக்கு அப்தாப் பரிசாக வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டேட்டிங் செல்போன் ஆப் மூலம் தனக்கு அறிமுகமான பெண் டாக்டர் ஒருவருக்கு இந்த மோதிரத்தை அப்தாப் வழங்கியுள்ளார் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த பெண் டாக்டர் இவரது புதிய காதலியா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது அப்தாப், திகார்சிறை 4-ல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.