வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலர் கைது

அருள்குமார்
அருள்குமார்
Updated on
1 min read

திருப்பூர்: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிநாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன்புதூர் ஆதிதிராவிடர் காலனியில் வசிப்பவர் சந்தியா (27). இவருக்குத் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியில் வீட்டின் எதிரே வாழ்ந்து வருபவர் அருள்குமார் (33). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அருள்குமார், அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சந்தியாவுக்கும், அருள்குமாருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது சந்தியாவின் சாதிப்பெயரை சொல்லி, அருள்குமார் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சந்தியா விஷம் அருந்தி மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக அணைப்புதூர் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சந்தியாவின் தாயார் மருதாள் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் உத்தரவின் பேரில், அவிநாசி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அருள்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in