

மதுரை: தேவர் ஜெயந்தியன்று மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் மோட்டார் சைக்கிள்களில் சில இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். இவர்கள் அங்கிருந்த காவ லாளியை தாக்கி மிரட்டினர்.
மாணவிகளை அச்சுறுத்தும் விதமாக, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாக சூரியா உட்பட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சூர்யா, மதுரை கே.புதூர் அருண், புதூர் காந்திபுரம் அருண் பாண்டியன், திருப்புவனம் மது நவீஸ் ஆகிய 4 பேர் மற்றும் மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி எதிரே மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் தகராறு செய்த ஒருவர் என 5 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இவர்கள் ஏற்கெனவே மதுரை சிறையில் இருப்பதால், தடுப்புக் காவலுக்கான உத்தரவு நகல் சிறை நிர்வாகத்திடம் வழங்கப் பட்டுள்ளது எனப் போலீஸார் தெரிவித்தனர்.