முதிய தம்பதியின் ரூ.3 கோடி பங்குகளை சுருட்டியவர் கைது

முதிய தம்பதியின் ரூ.3 கோடி பங்குகளை சுருட்டியவர் கைது
Updated on
1 min read

மும்பை: மும்பையில் ஒரு வயதான தம்பதி யினரின் டீமேட் கணக்கிலிருந்த ரூ.3.14 கோடி பங்குகள் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மும்பை போலீஸார் கூறியதாவது:

மும்பை போரிவிலியில் வசித்து வரும் 76 மற்றும் 92 வயதான தம்பதியினர் இணைந்து பங்கு தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தில் முன்பு பணி புரிந்த நரேஷ் சிங் (44) என்பவர், இறந்தவர் ஒருவரின் ஆவணங் களை போலியாக காண்பித்து புதிதாக தனது பேரில் ஒரு டீமேட் கணக்கை தொடங்கியுள்ளார்.

இதனிடையே, வயதான தம்பதியினரின் விலாசம் மற்றும் கைப்பேசி நம்பரையும் நரேஷ் சிங் தன்னிச்சையாக மாற்றியுள்ளார். கைப்பேசி தொடர்பு எண்ணாக தனது நம்பரை அவர் அப்டேட் செய்துள்ளார்.

அதன்பிறகு, அந்த தம்பதியின் டீமேட் கணக்கில் இருந்த ரூ.3.14 கோடி மதிப்பிலான பங்குகளை தனது டீமேட் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார். பின்னர் மாற்றம் செய்த பங்குகளை விற்று பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். வயதானவர்களின் தள்ளாத நிலையை சாதகமாக்கி அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பான சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து நரேஷ் சிங் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி சம்பவத்தில் வேறு யாரேனும் அவருக்கு உதவி செய்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in