

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஒருவர், 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, நவ.18-ம் தேதி சிறுமியின் பெற்றோர் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே, அந்தச் சிறுமி விஷமருந்தி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வேதாரண்யம் போலீஸார், சிறுவன் மீது நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.