

புதுடெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த அப்தாப் அமீன் பூனாவாலா (28) ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் டெல்லியில் வசித்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த மே 18-ம் தேதி ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தார். ஷ்ரத்தாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்தாப்பை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக புதிய தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன. ப்ரிட்ஜில் வைத்திருந்த ஷ்ரத்தா உடல் பாகங்களை வீசியெறிந்த பகுதிக்கு அப்தாபை போலீஸார் அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷ்ரத்தாவின்உடலின் 13 பாகங்கள் கிடைத்துள்ளன. இதில் பெரும்பகுதி ஷ்ரத்தாவின் எலும்புகள் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவரது தலையை, அப்தாப் எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தெற்கு டெல்லியின் மஹரவுலி உள்ளிட்டபல்வேறு பகுதிகள், ஹரியாணாவின் குருகிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அப்தாபை போலீஸார் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குஷ்ரத்தாவின் உடல் பகுதிகள்கிடைக்கின்றனவா என்றும் போலீஸார் தீவிரமாக சோதனைநடத்தியுள்ளனர். மேலும் அப்தாபின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கூரிய ஆயுதத்தையும் போலீஸார் தடயவியல் சோதனைக்குஅனுப்பியுள்ளனர். இந்த ஆயுதத்தால்தான் ஷ்ரத்தாவை அவர்வெட்டியுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே, மும்பையில் இருந்தபோது நவ. 24-ம் தேதி ஷ்ரத்தாவை, அப்தாப் தாக்கியுள்ளார். இதனால் காயத்துடன் மருத்துவமனையில் ஷ்ரத்தா சிகிச்சை பெற்றபுகைப்படத்தை அவரது தோழி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.