

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள நியூ ஹாரிசன் பொறியியல் கல்லூரியில் கடந்த மாதம் 25, 26 ஆகிய இரு தினங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது மாணவர்கள் சிலர் தங்களுக்கு விருப்பமான ஐபிஎல் அணியை புகழ்ந்து முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஆர்யன் (18), தினகர் (18) ஆகிய இரு மாணவர்களும், ரியா (17) என்ற மாணவியும் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கம் எழுப்பினர்.
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் மாரத்தஹள்ளி போலீஸார் அந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.