ஓலா ஸ்கூட்டர் வாங்கித் தருவதாக ஆயிரம் பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி

ஓலா ஸ்கூட்டர் வாங்கித் தருவதாக ஆயிரம் பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளதாவது:

பெங்களூருவில் போலியான வலைதளத்தை தொடங்கி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் இந்த வகை மோசடியில் ஈடுபட்டுள்ளது. முதலில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு ரூ.499 செலுத்தினால் ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்த கும்பல் கூறியுள்ளது.

அதன்பிறகு, வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு இன்சூரன்ஸ் மற்றும் போக்கு வரத்து செலவுகளுக்காக ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை செலுத்தவேண்டும் என கூறியுள்ளது.

இந்த கும்பல், பெங்களூரு, குருகிராம், பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 1,000 பேருக்கும் அதிகமானோரிடம் கோடிக்கணக்கில் பணத்தை கறந்துள்ளது.

இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஐபிசி 420 பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மோட்டார் வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதுபோன்ற மோசடி வலைதளத்தில் கூறப்படும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in