

சென்னை: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் விவேக் குமார். இவர் அதே பகுதியில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு கூடுதல் மின் இணைப்பு கேட்டு ஆன்லைனின் விண்ணப்பித்தார். மறுநாள் நொளம்பூர் முகப்பேர் மேற்கு மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று இளநிலை பொறியாளர் கோதண்டராமனை சந்தித்தார்.
அப்போது அவர், அரசு கட்டணத்தை செலுத்திவிட்டு, தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த விவேக் குமார், இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். அவர்கள் கொடுத்த அறிவுரைப்படி விவேக் குமார் ரூ.10 ஆயிரத்தை கோதண்டராமனிடம் நேற்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கோதண்டராமனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.