Published : 15 Nov 2022 04:30 AM
Last Updated : 15 Nov 2022 04:30 AM
தேனி: உத்தமபாளையத்தில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தம் இல்லாதவரின் பெயரைச் சேர்த்த காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், எரசக்க நாயக்கனூரைச் சேர்ந்த லாரன்ஸ்(31) என்பவரை,உத்தமபாளையத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(46) 2017 நவ.22-ல் பெட்ரோல் ஊற்றி கொலை செய்தார். இந்த வழக்கில் தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிரித்திவிராஜுக்கு கடந்த 8-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த வழக்கில், உத்தமபாளையம் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 2-ம் குற்றவாளியாக உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார்(47) என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும், இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ராஜேஸ்குமாரை வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்தார். மேலும், இந்த வழக்கில் சட்ட விரோதமாக ராஜேஸ்குமார் குற்றவாளி யாகச் சேர்க்கப்பட்டு 29 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
ஆகவே, விசாரணை அதிகாரியின் சம்பளத்திலிருந்து இழப்பீடு பெற அவர் தகுதியானவர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாக செயல்பட்ட அப்போதைய உத்தம பாளையம் காவல் ஆய்வாளரும், தற் போதைய சிவகங்கை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளருமான ராமகிருஷ்ணன் மீது துறைரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் 3 ஆண்டுகளுக்கு அவரை விசாரணை அலுவலராக நியமிக்கக் கூடாது. அவர் ஏற்கெனவே விசாரணை அலுவலராகச் செயல்பட்டு வரும் வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT