

தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் ஆனந்த்(26). இதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சூரியராஜ் (17). உறவினர்களான இவர்கள் இருவரும் வழக்கமாக தினமும் இரவில் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள பலபத்திரராமபுரம், கங்கனாகிணறு உள்ளிட்ட கிராமங் களுக்கு சென்று பால் எடுத்துவிட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு பால் எடுக்கச் சென்ற இருவரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், பலபத்திரராமபுரம் அருகே உள்ள தோட்டத்துக்கு செல்லும் வழியில் ஆனந்த், சூரியராஜ் இருவரும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஊத்து மலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்யக் கோரி இருவரது உறவினர்கள் மற்றும் பொது மக்கள் நொச்சிகுளம்- ஊத்து மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.