சென்னை | ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை

சென்னை | ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை
Updated on
1 min read

சென்னை: கோல்டு காயின் செயலியால் பணத்தை இழந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தருமபுரியைச் சேர்ந்தவர் சரண் (22). இவர் சென்னை மந்தைவெளியில் சி.ஏ. படித்து வந்தார். இதற்காக அவர் மயிலாப்பூரில் ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சரண் மட்டும் தனியாக இருந்துள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. மேலும் சரணின் பெற்றோரின் அழைப்பை எடுக்காததால், வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் வந்து பார்த்தபோது சரண், மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீஸார் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் சரண், ஆன்லைன் சூதாட்டம் விளையாடியிருப்பதும், இதற்காக பலரிடம் கடன் வாங்கியிருப்பதும், கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை முடிவுக்கு சரண் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in