தம்பதியை கட்டிப்போட்டு பள்ளிபாளையத்தில் ரூ.27.50 லட்சம், 18 பவுன் கொள்ளை

தம்பதியை கட்டிப்போட்டு பள்ளிபாளையத்தில் ரூ.27.50 லட்சம், 18 பவுன் கொள்ளை
Updated on
1 min read

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.27.50 லட்சம் மற்றும் 18 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற 10 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜவுளி நிறுவன உரிமையாளர் ஜெயப்பிரகாஷ். இவரது வீட்டில் நேற்று முன்தினம் மதியம் ஜெயப்பிரகாஷின் தந்தை மணி (70), இவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் மட்டும் இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் மணி மற்றும் பழனியம்மாளை தாக்கி, அவர்களின் கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டனர்.

பின்னர் வீட்டில் பீரோவில் இருந்து ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 18 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பினர். இது தொடர்பான புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

இதனிடையே, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் சந்திரகுமார், ரவி ஆகியோர் தலைமையில் 6 தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in