Published : 10 Nov 2022 04:55 AM
Last Updated : 10 Nov 2022 04:55 AM

கேரள கல்லூரி மாணவர் கொலையில் கைதான பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்து போலீஸ் விசாரணை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியில் பளுகல்அருகே உள்ள ராமவர்மன்சிறையைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா(23). இவரும் கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷாரோன்ராஜ்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் ஷாரோன்ராஜ் கடந்த25-ம் தேதி மரணமடைந்தார். அவரதுமரணத்தில் மர்மம் இருப்பதாக ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜ் கேரள மாநிலம் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், கிரீஷ்மாவால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோன்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கிரீஷ்மா, அவரது தாயார்சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்திருந்த நிலையில், ஷாரோன்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஷாரோன்ராஜை அழைத்துச் சென்ற கிரீஷ்மா ‘ஜூஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

இதனால் ஷாரோன்ராஜ், கிரீஷ்மா ஆகியோர் சென்ற இடங்களுக்கு தற்போது கிரீஷ்மாவை அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை, பேச்சிப்பாறை மற்றும் திற்பரப்பு பகுதிகளுக்கு கிரீஷ்மா அழைத்து வரப்பட்டு, போலீஸாரால் விசாரணை நடத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x