Published : 09 Nov 2022 04:25 AM
Last Updated : 09 Nov 2022 04:25 AM

தலைவர்கள் ஜெயந்தி, நினைவு நாளில் வன்முறை தொடர்பாக 365 வழக்குகள் பதிவு: அஸ்ரா கார்க் தகவல்

மதுரை: தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர், இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐஜி வெளி யிட்டுள்ள செய்தி: தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர், இம்மானு வேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சிகள் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. இதற்காக 144 தடை உத்தரவு, சொந்தவாகனங்களில் மட்டுமே வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் போலீஸாரால் விதிக்கப்படுகின்றன.

இதை மீறினால் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது. அப்படியும் வன்முறை தொடர்பாக 365 வழக்குகள் பதிவாகியுள்ளன. தேவர் ஜெயந்தியின்போது மதுரை மாவட்டம்-100, விருது நகர்-19, ராமநாதபுரம்-36, சிவகங்கை-39 என 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மருதுபாண்டியர் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டம்- 21, மதுரை மாவட்டம்- 41 என 62 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் மதுரை மாவட்டம்-31, விருதுநகர்-15, ராமநாதபுரம்-55, சிவகங்கை-8 என 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பதிவான 365 வழக்குகளின் மீது போலீஸார் சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x