நாகை | குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

நாகை | குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ளே தெத்தி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மாதவன் மகள் நேத்ரா நிதி(14). நாகையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, வீட்டின் அருகேயுள்ள குளத்தின் கரையில் புத்தகப் பையை வைத்துவிட்டு, குளத்துக்குள் குதித்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, மாணவியை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், “பள்ளியில் ஆசிரியர் திட்டியதே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம். எனவே, ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கூறி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேத்ரா நிதியின் உடலை வாங்க மறுத்து, சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

தகவலறிந்த ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெறும் என போலீஸார் உறுதியளித்ததால், மாணவியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அவரது சடலத்தை வாங்கிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in